இடுக்கி செருதோணியில் சுப யாத்திரை திட்டம் தொடக்கம்

மூணாறு, ஜன. 3: கேரள மாநில அரசு மற்றும் சமூக நீதித்துறை சார்பில் செயல்படுத்தும் சுப யாத்திரை திட்ட துவக்க விழா இடுக்கி செருதோணி டவுன் ஹாலில் நேற்று நடைபெற்றது. நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் திட்டத்தை துவக்கி வைத்தார். அப்போது அவர், ‘மாற்றுத்திறனாளிகளின் நலனை உறுதி செய்வதே அரசின் நோக்கம். அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அரசாங்கம் முயற்சிக்கின்றது’ என்றார். இந்த நிகழ்ச்சியில், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சுப யாத்திரை திட்டம் மூலம் கேரள மாநில மாற்றுத்திறனாளி நலக்கழகம் வழங்கும் மின்னணு நாற்காலிகள் மற்றும் நிலையான வைப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஆறு பேருக்கு மின்னணு சக்கர நாற்காலிகளும், 12 பேருக்கு ரூ.20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.

Related Stories: