திருமானூர் வட்டார விவசாயிகள் கண்டுணர் சுற்றுலா

அரியலூர், ஜன.3: திருமானூர் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் மாநில விரிவாக்கத் திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் (அட்மா) திருமானூர் வட்டார விவசாயிகள் அங்ககப் பண்ணையம் குறித்த மாவட்ட அளவிலான கண்டுணர் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நிலையத்தின் மூத்த விஞ்ஞானி மற்றும் தலைவர் டாக்டர்.அழகுக்கண்ணன் தலைமை வகித்தார். தொழில்நுட்ப வல்லுநர் ராஜா ஜோஸ்லின் அங்ககப் பண்ணைய முறை சாகுபடியில் தொழு உரம் இடுதல், அடியுரமாக வேப்பம் புண்ணாக்கு இடுதல், பஞ்சகாவியா, அமிர்தகரைசல் தயார் செய்து, தெளித்தல், இனக்கவர்ச்சிப்பொறி, சோலார் விளக்குப்பொறி, மற்றும் மஞ்சள் வண்ண ஒட்டும் அட்டை கொண்டு பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கினார். மண்புழு உரம் தயாரித்தல் மற்றும் அதன் பயன்கள் குறித்து விளக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது பாரத பிரதம மந்திரி விவசாயிகள் நிதி உதவி திட்டத்தின் 10வது தவணை நிதியை விடுவித்து அவர் உரையாற்றும் நேரலை நிகழ்ச்சி விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது. வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாளர் மீனாட்சி நன்றி கூறினார். இக்கண்டுணர் சுற்றுலாவிற்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சுந்தரமூர்த்தி, வாசுகி ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: