பிக்கட்டி, அதிகரட்டியில் கொரோனா தடுப்பூசி முகாம்

மஞ்சூர், ஜன. 3: கீழ்குந்தா, பிக்கட்டி, அதிகரட்டி பேரூராட்சி பகுதிகளில் நடந்த முகாம்களில் ஏராளமானோர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். நீலகிரி மாவட்டம் முழுவதும் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கீழ்குந்தா, பிக்கட்டி, அதிகரட்டி உள்பட மாவட்டம் முழுவதும் 235 நிலையான முகாம்கள் மற்றும் 20 நடமாடும் முகாம்கள் என மொத்தம் 255 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டன.மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் கீழ்குந்தா பேரூராட்சி சார்பில் மஞ்சூர் அங்கன்வாடி மையம், முள்ளிமலை அரசு உயர் நிலைப்பள்ளி, ஓணிகண்டி துணை சுகாதார நிலையம், குந்தாபாலம் சமுதாயகூடம், கெத்தை மின்வாரிய மருத்துவமனை ஆகிய இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டது.

இந்த முகாம்களில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 18 வயது நிரம்பியவர்கள், வியாபாரிகள் உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு முதல் மற்றும் 2ம் தவணை மற்றும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். தடுப்பூசி முகாமினை கீழ்குந்தா பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் ஆய்வு செய்தார். பிக்கட்டி பேரூராட்சி சார்பில் பிக்கட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பிக்கட்டி அங்கன்வாடி மையம், எடக்காடு நடுஹட்டி சமுதாயகூடம் ஆகிய இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டன. இதேபோல், அதிகரட்டி பேரூராட்சி சார்பில் நேற்று அதிகரட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மணியாபுரம் அரம்ப சுகாதார நிலையம், காட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அதிகரட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டது.

இந்த முகாம்கள் மூலம் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முதல் மற்றும் 2ம் தவணை மற்றும் 18 வயது நிரம்பியவர்கள், வியாபாரிகள் உள்பட ஏராளமானோர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதிகரட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஜெகநாதன் முகாம்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். கோத்தகிரி: கோத்தகிரியில் கொரேனா தடுப்பு நடவடிக்கையாக பேரூராட்சி நிர்வாகம் மூலம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளான  கிருஷ்ணாபுதூர் அங்கன்வாடி மையம், கோத்தகிரி, டானிங்டன் பேருந்து நிறுத்தம், கோத்தகிரி பேரூராட்சி அலுவலகம், கன்னேரிமுக்கு உயர்நிலைப்பள்ளி, தவிட்டுமேடு சமுதாயகூடம், கேர்பெட்டா  சுகாதார நிலையம், ஆகிய  பகுதிகளில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ஏரளாமான பொதுமக்கள் கலந்து கொன்டு முதல், 2வது தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

Related Stories: