ஊட்டி பழைய அக்ரஹாரத்தில் அனுமன் ஜெயந்தி

ஊட்டி, ஜன. 3:  ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. ஊட்டி பழைய அக்ரஹாரத்தில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 31ம் தேதி முதல் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அன்று காலை 9 மணிக்கு ஹோமம், 12 மணிக்கு அலங்கார பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று ஆஞ்சநேயர் ஜெயந்தியை ஒட்டி காலை 7 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் எழுந்தருளினார்.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக சுவாமி வீதிஉலா வெளியில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. இதனால் கோவில் வளாகத்தில் சுவாமி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முககவசம் அணிந்தும் சாமி தரிசனம் செய்தனர். இதேேபால் மாவட்டத்தில் உள்ள பிற ஆஞ்சநேயர் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

Related Stories: