கயத்தாறு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் விவசாய கடன் அட்டை வழங்கல்

கயத்தாறு, டிச.31: கயத்தாறு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் விவசாய கடன் அட்டை விண்ணப்பம் பெறும் முகாம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னோடி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கமாக செயல்பட்டு வரும் கயத்தாறு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு விவசாய கடன் அட்டை திட்ட விண்ணப்ப பெறும் முகாம் கூட்டுறவு சங்க வளாகத்திலுள்ள கூட்டரங்கில் நடந்தது. முகாமிற்கு கயத்தாறு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் கோதண்டராமர் தலைமை வகித்தார். கயத்தாறு கூட்டுறவு சங்க செயலாளர் சுப்புலட்சுமி வரவேற்றார். தூத்துக்குடி பால்வளத்துறை துணைப்பதிவாளர் நவராஜ், தூத்துக்குடி ஆவின் பொது மேலாளர் அமரவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ் சிறப்புரையாற்றினார். கோவில்பட்டி சரக பால்வளத்துறை முதுநிலை ஆய்வாளர் மனோகர் நன்றி கூறினார்.

முகாமில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று விவசாய கடன் அட்டை மற்றும் கடனுக்கான விண்ணப்பங்களை அளித்தனர்.

Related Stories: