ஊட்டி, டிச. 27: நீலகிரி மாவட்டத்தில் நேற்று 16வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. கோத்தகிரி மற்றும் ஜெகதளா பேரூராட்சி பகுதிகளில் கலெக்டர் அம்ரித் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழகத்தை பொருத்த வரை கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வசதியாக வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 16வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், பொது இடங்கள், சுற்றுலா தலங்கள் உட்பட 254 மையங்களில் நடைபெற்றது. இதில், பொதுமக்கள் மிகுந்த ஆர்வமுடன் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.