வேலூரில் உள்ள வங்கி, நகை மற்றும் அடகு கடைகளில் இரவு நேரத்திலும் வீடியோ பதிவாகும் தரமான சிசிடிவி கேமராக்கள், ெசன்சார் அலாரங்களை பொருத்த வேண்டும்: ஆலோசனை கூட்டத்தில் எஸ்பி அறிவுரை

வேலூர், டிச.24: வங்கி, நகை மற்றும் அடகு கடைகளில் இரவு நேரத்திலும் வீடியோ பதிவாகக்கூடிய தரமான சிசிடிவி கேமராக்கள், சென்சார் அலாரங்களை ெபாருத்த வேண்டும் என்று வேலூர் எஸ்பி அறிவுரை வழங்கியுள்ளார். வேலூர்மாவட்டத்தில் உள்ள வங்கி, நகை மற்றும் அடகு கடைகளில் திருட்டு நடக்காமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம் வேலூர் கொணவட்டத்தில் நேற்று நடந்தது. வேலூர் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கினார். ஏஎஸ்பி ஆல்பர்ட்ஜான், ஏடிஎஸ்பி சுந்தரமூர்த்தி, டிஎஸ்பிக்கள் பழனி, ராமமூர்த்தி, பயிற்சி டிஎஸ்பி அசோக், விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வேலூர் எஸ்பி ராஜேஷ்கண்ணன் பேசியதாவது: சிசிடிவி கருவிகள் குறைந்தது 5 மெகா பிக்சல் வரை திறன் இருந்தால் மட்டுமே மர்ம நபர்களின் முகம் தெளிவாக தெரியும். வெளிப்பகுதியில் 8 மெகா பிக்சல் திறன்கொண்ட சிசிடிவி கருவிகளை பொருத்தியிருக்க வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் வீடியோ பதிவாகக்கூடிய தரமான கேமராக்கள் ைவத்திருக்க வேண்டும்.

சிசிடிவி காட்சிகளை பார்வையிட பெரிய கடைகளில் தனிஆட்கள் நியமிக்க வேண்டும். பல இடங்களில் வயதானவர்களை இரவுக்காவலர்களாக பணியில் அமர்த்துகின்றனர். அவர்களால் நள்ளிரவு 1 மணிக்கு மேல் விழித்திருக்க முடிவதில்லை. அண்மையில் வேலூரில் நடந்த நகைக்கடை கொள்ளையின்போது, அங்கு பணியில் இருந்தவர்கள் மதுபோதையுடன் முன்பக்கம் அமர்ந்துகொண்டு அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர். பின்புறத்தில் நகை கொள்ளை சம்பவம் அரங்கேறியது. வயதானாலும் நேர்மையான இரவுக்காவலர்கள் பலர் விழிப்புடன் காவல் காப்பவர்களும் உண்டு. இருப்பினும் தரமான சிசிடிவி கேமராக்கள் என்பது முக்கியமாகிறது.

ஒரு இடத்தில் கொள்ளையடிக்க திட்டமிடும் மர்ம நபர் ஒருவர், சுமார் ஒரு மாதமாக அந்த பகுதியை நோட்டம் விடுகிறான். அதன்பிறகு சில வாரங்கள் கழித்து பொறுமையாக வந்து ஒருநாள் கொள்ளையடிப்பான். ஏனென்றால் ஒரு மாதம் சிசிடிவி புட்டேஜ் மட்டுமே இருக்கும் என்பதால் இப்படி செய்வதாக, ஏற்கனவே பிரபல நகை கடை ஒன்றில் கொள்ளையடித்த கொள்ளையனிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனால் குற்றவாளியை பிடிப்பதில் சவால் ஏற்படுகிறது. கேமராக்களை கண்காணிக்க தனி ஆட்கள் நியமிக்க வேண்டும். இவ்வாறு பேசினார். கூட்டத்தில் பயிற்சி டிஎஸ்பி அசோக் புரோஜெக்டர் மூலம் ஏற்கனவே நடந்த கொள்ளை சம்பவங்கள் எப்படியெல்லாம் நடந்தது என்று, அதில் இருந்து எப்படி பாதுகாப்பாக இருக்க ேவண்டும் என்று விளக்கினார். இதில் இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன், நந்தகுமார், எஸ்ஐக்கள் நாகேந்திரன், சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: