தூத்துக்குடி நகர்புற உள்ளாட்சி தேர்தல் 100% வெற்றிக்காக பாடுபட வேண்டும்தூத்துக்குடி நகர்புற உள்ளாட்சி தேர்தல் 100% வெற்றிக்காக பாடுபட வேண்டும்

தூத்துக்குடி, டிச.24: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாநகரில் 100 சதவீதம் வெற்றி என்ற நோக்கத்தோடு பணியாற்றுவது என மாநகர திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தூத்துக்குடி மாநகர திமுக செயற்குழு கூட்டம் கலைஞர் அரங்கத்தில் நடந்தது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் முன்னிலை வகித்தார். இதில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் அமைச்சருமான கீதாஜீவன் பேசினார். கூட்டத்தில், இந்தியாவில் சிறந்த முதல்வராக தேர்வு பெற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது, வ.உ.சியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு வ.உ.சி சாலை உள்ளிட்ட 13 அறிவிப்புகள் வெளியிட்டதற்கும், குரூஸ்பர்னாந்து மணிமண்டபம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிட்டதற்கும் முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தலைவர் ஸ்டாலின் அறிவிப்பிற்கேற்ப மாநகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடத்துவது, விரைவில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர வார்டுகளுக்குட்பட்ட வாக்குசாவடிகளுக்கு வரும் 30ம் தேதிக்குள் பூத் கமிட்டி அமைத்து மாவட்ட அலுவலகத்தில் ஒப்படைப்பது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாநகரில் 100 சதவீதம் வெற்றி என்ற நோக்கத்தோடு பணியாற்றுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட துணைச்செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், மாவட்ட அணி அமைப்பாளர்கள் கஸ்தூரிதங்கம், மதியழகன், அன்பழகன், ரமேஷ், சுசிரவீந்திரன், பாலகுருசாமி, பிரதீப், மாநகர துணைச்செயலாளர்கள் கனகராஜ், கீதாமுருகேசன், பகுதி செயலாளர்கள் நிர்மல்ராஜ்,  ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், மேகநாதன், ஜெயக்குமார்,ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, அரசு வழக்கறிஞர்கள் ஆனந்த்கேப்ரியல்ராஜ், சுபேந்திரன் மாநகர அணி அமைப்பாளர்கள் அருண்குமார், கிறிஸ்டோபர் விஜயராஜ்,  சேசையா, அந்தோணி கண்ணன், முருகஇசக்கி, நலம் ராஜேந்திரன் மற்றும் பாலசுப்பிரமணியன், டென்சிங், ஜெபசிங், சேசுதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: