3ம் பருவ பாடப்புத்தகம் தயார் 40 சதவிகித மானியத்துடன் வீடுகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி சாதனம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர், டிச.16: பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு வழங்கும் 40 சதவிகித மானியத்துடன் வீடுகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி சாதனம் அமைத்திட விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்துள்ளதாவது: வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் அரசு வழங்கும் 40 சதவிகித மானியத்துடன் வீடுகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி சாதனம் அமைத்திட பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் மூலம் மரபுசாரா எரிசக்தியினை மேம்படுத்தும் திட்டங்கள் மாவட்டம் முழுவதும் செயல்படு த்தப்பட்டு வருகிறது. தற்பொழுது தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சூரிய மின்சக்தி உற்பத்தி சாதனம் வீடுகளின் மேற்கூரையில் நிறுவுவதற்கு அரசு நிர்ணயம் செய்த தொகையிலிருந்து 40 சதவிகித மானியம் வழங்கிட அரசு அறிவித்துள்ளது.

இவ்வாறுஅமைக்கப்படும் சூரிய ஒளி மின்சக்தி சாதனம் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமானது வீடுகளின் உபயோகத்திற்கு போக மீதமுள்ள மின் சாரமானது மின்வாரிய கட்டமைப்புக்கு அனுப்பப்படு கிறது. இவை அனைத்தும் நிகர அளவி மூலம் கணக்கிடப்படுவதால் மின் கட்டணம் குறைக்கப்படுகிறது. எனவே அதிகமாக மின்கட்டணம் செலுத்தும் அனைத்து குடும்பதாரர்கள் இத்திட்டத்தின் மூலம் சூரிய மின்சக்தி சாதனம் அமைத்துத் தங்களது மின் செலவினங்களை குறைத்து பயன்பெறலாம். இது தொடர்பாக விவரங்களுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் உள்ள தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் உதவிப்பொறியாளரை 9385290524 தொலைபேசி எண் வாயிலாகவும், நேரிலும் அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Related Stories: