விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி மாணவி சாதனை

நெல்லை, டிச.15:  திண்டுக்கல் மாவட்டத்தில் மாநில அளவிலான தடகள போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற நெல்லை வண்ணார்ப்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவி அபிநயா, 2 தங்கம், 1 வெண்கலம் வென்று சாதனை படைத்தார். மேலும் அவர் தென்னிந்திய அளவிலான தடகள போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளி சேர்மன் சிவா சேதுராமன், தாளாளர் திருமாறன், முதல்வர் முருகவேல், துணைமுதல்வர் ஜேக்கப் துரை ராஜ், உடற்கல்வி இயக்குநர் உமாநாத் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: