விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை காதர்பாட்ஷா எம்எல்ஏ பேச்சு

ராமநாதபுரம், டிச.13: தமிழ்நாடு எறிபந்து, மாவட்ட எறிபந்து கழகம் சார்பில் மாநில அளவிலான சீனியர் ஆடவர், மகளிர் எறிபந்து போட்டி ராமநாதபுரத்தில் தொடங்கியது. இப்போட்டியை காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, இந்திய கடலோரக் காவல் படை கமாண்டன்ட் முஹமது ஷாநவாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். எம்எல்ஏ பேசுகையில், விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு, மாணவர்களுக்கு பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி கற்க தமிழக அரசு முன்னுரிமை அளிக்கிறது.

 விளையாட்டு துறையில் சிறந்து விளங்கிய ஏராளமான மாணவர்கள் அரசின் பல்வே துறைகளில் வேலைவாய்ப்பு பெற்று வாழ்வில் உயர்ந்த நிலை அடைந்துள்ளனர். மாணவர்கள் படிக்கும் காலத்தில் விளையாட்டிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார். கூடுதல் எஸ்பி ஜெயசிங், முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து, ஹாக்கி சங்க புரவலர் செல்லத்துரை அப்துல்லா, எறி பந்து கழக மாநில தலைவர் பால விநாயகம், பொதுச்செயலாளர் ராஜா, துணைத் தலைவர் ஜெயசிங், மாவட்ட தலைவர் காபத்துல்லா முன்னிலை வகித்தனர்.

23 ஆடவர், 18 மகளிர் அணிகள் பங்கேற்றன. முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கணேச பாண்டியன், பொறியியல் கல்லூரி முதல்வர் பெரியசாமி, எறிபந்து கழக மாவட்ட செயலாளர் ரமேஷ் பாபு, பொருளாளர் அதிவீர நாச்சியப்பன், துணை தலைவர்கள் ராமநாதன், முத்துராமலிங்கம், இணை செயலாளர் ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் கதிரவன், மண்டபம் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் தவ்பீக் அலி, ராமநாதபுரம் நகர் பொறுப்பாளர்கள் கார்மேகம், பிரவின் தங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: