ஆதிதிராவிடர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கை

விருத்தாசலம், டிச. 9: ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் விருத்தாசலம் வட்டத்திற்கு உட்பட்ட விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், மங்கலம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 27 ஆதிதிராவிடர் நல விடுதிகள் செயல்பட்டு வருகிறது.இந்த விடுதிகளுக்கான 2021-2022ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை, விருத்தாசலம் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் செல்லபாண்டியன் தலைமையில், தனி வட்டாட்சியர் கமலா முன்னிலையில் இறுதி செய்யப்பட்டது. இதில் விடுதி காப்பாளர்கள், தேர்வுக்குழு உறுப்பினர்கள் ஏற்கனவே தேர்வு செய்த இந்த மாணவ, மாணவிகள் பட்டியலை மாவட்ட அலுவலரிடம் காண்பித்து இறுதி செய்தனர்.

Related Stories: