திருப்புவனம் அருகே தடுப்புச்சுவர் உடைந்து சாலை துண்டிப்பு திருப்புவனம் அருகே கானூர் கால்வாய் தடுப்புச்சுவர் இடிந்ததால் சாலை துண்டிக்கப்பட்டது.

திருப்புவனம், டிச.8: திருப்புவனம் அருகே சாலை துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். திருப்புவனம் அருகே விரகனூர் மதகு அணையிலிருந்து இடது பிரதான கால்வாயில் கானூர் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் செல்வது வழக்கம். நேற்று  வைகை அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் அதிக அளவு கால்வாயில்  சென்றது. இதனால் இடது பிரதான கால்வாயின் தடுப்புச்சுவர் சுமார் 10 மீட்டர் நீளத்துக்கு உடைந்து சரிந்ததால் பெத்தானேந்தல் செல்லும் ரோடு துண்டிக்கப்பட்டது. கானூர் காலில் இடதுபுறம் தண்ணீர் அரிப்பை தடுப்பதற்காக பெத்தானேந்தல் கண்மாய்க்கு செல்லும் ஷட்டர் அருகே 100 மீட்டர் நீளத்திற்கு தடுப்புச்சுவர் கடந்த சில வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. நேற்று முன்தினம் சென்ற அதிக அளவு தண்ணீரால் 10 மீட்டர் நீளத்திற்கு தடுப்புச் சுவர் இடிந்தது. இதனால் பெத்தானேந்தல் செல்லும் கால்வாய்க்கரை ரோடு துண்டிக்கப்பட்டது. இதனால்  பெத்தானேந்தல், மணல் மேடு உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.    

Related Stories:

More