நள்ளிரவில் மதுக்கேட்டு தகராறு மதுபார் ஊழியருக்கு கத்திக்குத்து கிணற்றில் விழுந்து விவசாயி சாவு

ஈரோடு,  டிச. 8:  ஈரோடு சென்னிமலை ரோடு காசிபாளையம் அரசு ஐடிஐக்கு எதிரே  டாஸ்மாக் கடையும், பாரும் செயல்பட்டு வருகிறது. பாரில் சிவகங்கை  மாவட்டம் தேவகோட்டை செலுகை கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் பூபாலன் (26) மற்றும் அபிமன்யு, வீரசேகர், பிரவீன் உள்ளிட்டோர் வேலை செய்து வருகின்றனர். கடந்த  5ம் தேதி இரவு டாஸ்மாக் கடை மூடிய பின், பாரில் பூபாலன் மற்றும் அவருடன்  வேலை பார்க்கும் ஊழியர்கள் வரவு செலவு கணக்கு பார்த்துக்கொண்டிருந்தனர்.  அப்போது, நள்ளிரவு நேரத்தில் பாருக்கு வந்த ஈரோடு கே.கே.நகரை சேர்ந்த  சங்கர், கார்த்தி, சூர்யா, மற்றொரு நபர் என 4 பேர் மது கேட்டுள்ளனர். ஆனால்,  பாரில் விற்பனை செய்வது இல்லை என பூபாலன் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து  4 பேரும் தகாத வார்த்தையால் பேசி பூபாலனை கைகளால் தாக்கி கீழே தள்ளி  விட்டுள்ளனர்.

பின்னர் சங்கர் என்பவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து  பூபாலனின் தலை, இடது காது, தோள் பட்டையில் குத்தியுள்ளார். இதில், ரத்த  வெள்ளத்தில் பூபாலன் கூச்சல் போடுவதை கேட்டு அக்கம்பக்கத்தினர் வர  துவங்கினர். இதைப்பார்த்து 4 பேரும், பூபாலனுக்கு கொலை மிரட்டல் விடுத்து  அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து பாரில் வேலை செய்யும் சக ஊழியர்கள்  பூபாலனை 108 ஆம்புலன்சு மூலம் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து தகவலிறிந்த ஈரோடு தாலுகா போலீசார்  பூபாலனிடம் புகாரை பெற்று நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து, தப்பி  ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: