சூதாடிய 5 பேர் கைது

ஈரோடு,  டிச. 8: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஈஞ்சம்பள்ளி அகதிகள் முகாம் அருகே  உள்ள மைதானத்தில் சிலர் சூதாடுவதாக நேற்று முன்தினம்  போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், மலையம்பாளையம் போலீசார் அங்கு  விரைந்து சென்று, சூதாடிய மொடக்குறிச்சி  பி.கே.வலசு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சூர்யக்குமார் (46), ஜெபராஜ் (29),  திலீப்குமார் (32), நிலேஸ்குமார்( 34), துஷ்யந்தன் (38) ஆகிய 5 பேரை  சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.250 ரொக்கம்  மற்றும் சீட்டுக்கட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குற்ற செயல்களில் தொடர்புடையவர்களா?

போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கைரேகை பதிவுகள்

ஈரோடு, டிச. 8:  போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேற்று ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. காவலர்  தேர்வு வாரியம் மூலம் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு  நடைபெற்றதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் உடல் தகுதி தேர்வு நடைபெற்றது.  இந்த தேர்வில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 134 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.  தேர்வு செய்யப்பட்டவர்கள் குற்ற செயல்களில் தொடர்புடையவர்களா? குற்ற  பதிவேட்டில் இவர்களது கைரேகைகள் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து ஆய்வு  செய்யும் வகையில், நேற்று ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் கைரேகை பதிவுகள்  செய்யும் பணி நடைபெற்றது. ஒவ்வொரு நபராக கைரேகைகளை பதிவு செய்தனர்.

Related Stories:

More