வாலாஜாபாத் ஒன்றியத்தில் 763 பேருக்கு வீடு கட்டும் ஆணை

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்தில், 763 பேருக்கு, பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.வாலாஜாபாத் ஒன்றியம் 61 ஊராட்சிகளில், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன் தலைமை தாங்கினார், துணைத் தலைவர் சேகர் முன்னிலை வகித்தார், எம்எல்ஏக்கள் சுந்தர், எழிலரசன் கலந்துகொண்டு வாலாஜாபாத்்் ஒன்றியத்தின் 61 ஊராட்சிகளில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 763 பேருக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினார்கள். இதில், மாவட்ட கவுன்சிலர்கள் பொற்கொடி செல்வராஜ், ராஜலட்சுமி குஜராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்மலா, ராஜ்குமார், திமுக ஒன்றிய செயலாளர் பூபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.    

Related Stories:

More