சேமிப்பு பெயரில் ஆசிரியர் ரூ.4 கோடி மோசடி

திருச்சி, டிச.7: திருச்சி மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. டிஆர்ஓ பழனிக்குமார் தலைமை வகித்து மனுக்களை பெற்றுக்கொண்டார். தொட்டியம் மணமேடு, கோடியம்பாளையம், பள்ளிக்கூடத்தெருவை சேர்ந்த வெள்ளையம்மாள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ‘அலகரை கிராமத்தை சேர்ந்த கருப்பையா தொட்டியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பதிவு செய்யாத ஒரு நிதி நிறுவனம் போன்ற ஒன்றை நடத்தி, என்னை போல நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் சேமிப்பு என்ற பெயரில் சுமார் ரூ.4 கோடி வசூல் செய்துள்ளார். பணத்தை திருப்பி கேட்டபோது திரும்பி தர மறுத்து விட்டார். இது குறித்து திருச்சி கலெக்டர், முசிறி ஆர்டிஓ, மாவட்ட போலீஸ் எஸ்பி, திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தொட்டியம் இன்ஸ்பெக்டருக்கு கடந்த ஓராண்டாக தொடர்ந்து புகார் அளித்தோம். முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினோம். இதன் தொடர்ச்சியாக ஆசிரியர் கருப்பையா மீது தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கருப்பையாவை கைது செய்து, ஆசிரியர் பணியிலிருந்து நீக்க வேண்டும். கருப்பையா, அவரது வாரிசுகள் பெயரில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: