பல்கலைக்கழக நிர்வாகம் சம்பளம் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பரங்குன்றம், டிச. 7: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுநிலை துணைபதிவாளர், துணை பதிவாளர், கண்காணிப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட பணிகளில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் நிரந்தர பணியில் உள்ளனர். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற முறையற்ற நிர்வாகத்தால், பல்கலைக்கழகம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதனால் கடந்த சில மாதங்களாக பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

 இதனால் பல்கலைக்கழக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், பென்ஷன் பெறுவோர் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பல்கலைக்கழக நிர்வாகத்தின் இப்போக்கை கண்டித்தும், உண்மை நிலையை அரசுக்கு தெரியப்படுத்தவும், சம்பளத்தை உடனடியாக வழங்கவும் வலியுறுத்தியும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள துணைவேந்தர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: