தேனி தொடர் மழையால் தென்னை தொழிலாளர்கள் பாதிப்பு

வருசநாடு, டிச. 7: கடமலை-மயிலை ஒன்றியத்தில் தொடர் மழையால் தென்னந்தோப்புகளில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.  கடமலை-மயிலை ஒன்றியத்தில் தொடர் மழையால், தென்னை விவசாயிகளும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்னை மரங்களில் பழுது பார்த்தல், இளநீர் இறக்குதல், தேங்காய் வெட்டும் பணிகள் எதுவும் நடக்கவில்லை. மேலும், குடோன்களில் இருப்பு வைத்துள்ள தேங்காய்கள் உறிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால், வெளியூர் சந்தைகள், வெளி மாநிலங்களுக்கு தேங்காய் அனுப்ப முடியவில்லை. மேலும், தென்னை சார்ந்த தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.    

Related Stories:

More