விதைப்பந்து நட்ட மாணவர்கள்

போடி, டிச.6: போடியை  சுற்றியுள்ள கிராமப்புறங்களில் சுற்றுச்சூழலை பாதுகாக்க  சில்லமரத்துபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியும், போடி உதவி வேளாண்மை துறையும், சமூக ஆர்வலர் பசுமை முருகன் ஆகியோர் இணைந்து பனை விதைகள், வேம்பு, புளி, நாவல், கொய்யா போன்றவற்றின் 5 ஆயிரம் விதை பந்துகளை தயார்  செய்து ஆங்காங்கே நட்டு வைத்தும், வீசியும் வருகின்றனர்.  போடி அருகே டொம்புச்சேரி கெப்பணக்கவுண்டர் ஊரணி குளக்கரை முழுவதும் நேற்று விதைப்பந்து நடப்பட்டது.

இதில்  போடி புறநகர் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார், போடி உதவி வேளாண்மை இயக்குநர் தேவேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை பாக்கியலட்சுமி முன்னிலை வகித்தார். பள்ளியின் தேசிய பசுமைப்படை ஆசிரியர் முத்துராஜ், தாவரவியல் முதுநிலை ஆசிரியர் விஜய்குமார், சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செல்வேந்திரன் மற்றும்  மாணவர்கள் கலந்து கொண்டனர். 

Related Stories:

More