கபளீகரம் செய்தவர்களை விட்டுட்டாங்க... சப்வே குளத்தில் பல கோடி ரூபாய் சுருட்டல்

கோவை, டிச.6: கோவை நகரில் மேம்பால சப்வே பகுதியில் மழை நீர் குளங்கள் உருவானதன் பின்னணியில் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக தெரிகிறது. கோவை நகரில் கடந்த 10 ஆண்டில் சுமார் 120 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால் உருவாக்கப்பட்டது. லங்கா கார்னர் பாலம், அரசு மருத்துவமனை வளாகம், கூட்ெசட் ரோடு, ஸ்டேட் பாங்க் ரோடு, அவினாசி ரோடு உப்பிலிபாைளயம், கிக்கானி பாலம், சோமசுந்தரா மில் பாலம், சாயிபாபா காலனி பாலம் உள்பட பல்வேறு பகுதிகளில் பல கோடி ரூபாய்க்கு மழை நீர் வடிகால் பணி நடந்தது.

ஆனால், இதுவரை மழை காலங்களில் மேம்பால சப்வே பகுதியில் மழை நீர் குளங்கள் உருவாவதை தடுக்க முடியவில்லை. பெயரளவிற்கு வேலை செய்து பில் போட்டு மழை நீர் வடிகால் கணக்கு காட்டியிருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த 10 ஆண்டில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணி நடத்தியதாக கணக்குகளை ஒன்றிய அரசு ஆய்வு நடத்தவில்லை. இது தொடர்பாக எந்த தணிக்கையும் நடக்கவில்லை. மோசடி செய்த அ.தி.மு.கவினரும், அப்போது மாநகராட்சி பொறுப்பில் இருந்தவர்களும் மழை நீர் வடிகால் விவகாரத்தில் தப்பி விட்டனர். பாவம் அப்பாவி மக்கள் நகரில் குளம் போல் தேங்கிய மழை நீர் குளங்களால் வீட்டிற்கு செல்லமுடியாமல் ரோட்டில் அல்லாடும் அவல நிலையில் இருக்கின்றனர். பாலத்தின் கீழ் பகுதியில் தேங்கும் மழை நீரை எவ்வளவு காலத்திற்கு மோட்டார் வைத்து உறிஞ்சி வெளியேற்றுவது, வேறு மாற்று திட்டம் எதுவுமில்லையா? என மக்கள் புலம்பி கொண்டிருக்கின்றனர்.

நகரில், 150க்கும் மேற்பட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்குவதால் போக்குவரத்து தடை படுகிறது.  லங்கா கார்னர் பாலம், அவினாசி ரோடு சப்வே, மேட்டுப்பாளையம் ரோடு சப்வே, கிக்கானி பாலம்,  சோமசுந்தரா மில் பாலம் போன்றவை மழை காலங்களில் மூடப்படும் நிலையில் இருக்கிறது. இது குறித்து தொழில் துறையினர் கூறுகையில்,‘‘நகரில் கடந்த 10 ஆண்டில் உள் கட்டமைப்பு மேம்பாடு என்ற பெயரில் மோசடி நடந்துள்ளது.

இது தொடர்பாக, விசாரணை நடத்தி மாநகராட்சி பணியில் இருந்த முக்கிய அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும். மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிக்காக செலவிட்ட தொகையை ஆய்வு நடத்தி தணிக்கை விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் இதுபோன்ற தவறுகள் இனி எப்போதும் தொடரும்’’ என்றனர்.

ஆய்வு நடத்தி திட்டம் போடுவோம்

கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா கூறுகையில்,‘‘மேம்பால சப்வே பகுதியில் மழை நீர் வெள்ளம் தானாக வழிந்து போக வாய்ப்பில்லை. மழை காலங்களில் போக்குவரத்து தடைபடுவது வாடிக்கையாகி விட்டது. இது தொடர்பாக நிபுணர் குழுவினருடன் ஆய்வு நடத்தப்படும். எந்த பகுதியில் இருந்து எவ்வளவு மழை நீர் வருகிறது என ஆய்வு நடத்தி அதற்கேற்ப திட்டங்கள் உருவாக்க வேண்டி உள்ளது. கடந்த காலத்தில் எவ்வளவு நிதியில் மழை நீர் வடிகால் பணி செய்தார்கள், அதில் முறைகேடு நடந்ததா? என தெரியவில்லை. வரும் காலத்தில் மழை நீர் தேக்கம் தடுக்க தேவையான முயற்சிகள் ஆய்விற்கு பின்னரே மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

Related Stories:

More