சேத்தியாத்தோப்பு பகுதியில் புதிய மின்மாற்றி அமைப்பு

சேத்தியாத்தோப்பு, டிச. 6: சேத்தியாத்தோப்பு தெற்கு பிரிவு மற்றும் கிழக்குப் பிரிவு மின்வாரிய அதிகாரிகள் மூலம் குறைந்த அழுத்த மின்சாரத்தை சரி செய்யும் பொருட்டு புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. சிதம்பரம் மின்வாரிய கோட்டம் அறிவுறுத்தலின்படி எறும்பூர் மின்மாற்றி 16, வளையமாதேவி மின்மாற்றி 9, பின்னலூர் மின்மாற்றி 8, வத்திராயன்தெத்து மின்மாற்றி 9, நார்த்தங்குடி 2 ஆகியவை 16 கேவிஏவிலிருந்து 100 கேவிஏயாக தரம் உயர்த்தி மாற்றி அமைக்கப்பட்டது. இதுபோல் வெய்யலூர் மின்மாற்றி 7 புதிய 63 கேவிஏயாக அமைக்கப்பட்டுள்ளது. இது தமிழக அரசு உத்தரவுப்படி அமைக்கப்பட்டது. இவற்றின் திட்ட மதிப்பீடு 21,99,300 ஆகும். இந்நிகழ்ச்சியில் சேத்தியாத்தோப்பு உதவி செயற்பொறியாளர் குமார், உதவி மின் பொறியாளர் ராஜ்மோகன், வினோத், தமிழ்மணி, பாலு, வெய்யலூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்மோகன், துணை தலைவர் கவிதா சுகுமார் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: