கல்லக்குறிச்சியில் உலக மண்வள தின விழா

அரியலூர்,டிச.6: அரியலூர் வேளாண்மை வட்டாரம் கல்லங்குறிச்சி கிராமத்தில் உலக மண் வள தின விழா நடைபெற்றது. உலக மண்வள தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5ம் தேதி கொண்டாடப்பட்டு வருவதை தொடர்ந்து, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் ஒன்றான கல்லங்குறிச்சி கிராமத்தில், நேற்று உலக மண்வள தின விழா நடத்தப்பட்டது. இதில் அரியலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சாந்தி மண் மாதிரி சேகரிக்கும் முறை மற்றும் மண் ஆய்வின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில் அரியலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கு.சின்னப்பா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கி பேசினார். கூட்டத்தில் அரியலூர் வட்டார அட்மா திட்ட தலைவர் அன்பழகன், அரியலூர் வட்டார வேளாண்மை அலுவலர்கள் தமிழ்மணி, ஆதிகேசன் (ம.ப.நி), துணை வேளான்மை அலுவலர் பால் ஜான்சன், உதவி விதை அலுவலர். கவுஞ்சி, கலந்து கொண்டனர், மேலும் இந்த கூட்டத்திற்கான ஏற்பாட்டினை வட்டார தொழில்நுட்ப மேலாளர், செந்தில், உதவி தொழில்நுட்ப மேலாளர் அன்பழகன், உதவி வேளாண்மை அலுவலர்கள், தேவி, மற்றும் ஆர்த்தி (வே.வி) செய்திருந்தனர்.

Related Stories: