கேமரா திருடிய வாலிபர் கைது

திருச்சி, டிச.4: திருச்சி பீமநகர் மாரியம்மன் கோயில் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் பரமசிவன்(62). இவர் மத்திய பஸ் நிலையம் அருகே டிபன் கடை வைத்து நடத்தி வருகிறார். பரமசிவம் தனது வீட்டில் பொருத்திய 2 சிசிடிவி கேமராக்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். பாலக்கரை போலீசில் பரமசிவம் புகார் செய்தார். எஸ்ஐ வைத்தியநாதன் வழக்குப்பதிந்து விசாரித்தார்.

இந்நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் மேல மூங்கிலடி பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில், பரமசிவம் வீட்டிலிருந்த கேமராக்களை திருடியதை ஒப்புக்கொண்டார். மாநகர் பகுதியில் நடந்த திருட்டு சம்பவங்களில் ஜனார்த்தனுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

Related Stories: