போடி அருகே ரயில்வே தரைப்பாலம் அமைக்க கோரிக்கை தங்கதமிழ்ச்செல்வன் ஆய்வு

போடி, டிச. 3: போடியிலிருந்து மதுரை வரை குறுகிய ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டத்தின்படி, கடந்த 5 ஆண்டுகளு க்கு மேலாக பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் மதுரையிலிருந்து தே னி வரையில் ரயில்வே பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனி பகுதியில், மதுரையிலிருந்து போடிக்கு வந்த ரயில் என்ஜினை திருப்புவதற்காக இங்கு வருவது வழக்கம். இந்நிலையில், இப்பகுதியில் ரயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டால் கடப்பது கடினம் என்பதால், தடையின்றி வாகனங்களுடன் கடப்பதற்கு தரைப்பாலம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வனிடம் கோரிக்கை வைத்து ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி, நேற்று இப்பகுதியினை ஆய்வு செய்த தங்க தமிழ்ச்செல்வன் உயர் அதிகாரி மற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து, பொதுமக்களின் வசதிக்காக தரைப்பாலம் கட்டுவதற்கான ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார்.

Related Stories:

More