முகாம்களில் மக்கள் தங்க வைப்பு

கடலூர், டிச. 2: கடலூர் பகுதியில் தொடர் மழை காரணமாக கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், கோண்டூர், பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம் பகுதியிலுள்ள வீடுகளில் மழை வெள்ளநீர் சூழ்ந்து  பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்கள் அப்பகுதியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து ஐயப்பன் எம்எல்ஏ, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பு  மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள கடலூர் வில்வநகர் காலனி மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து கடலூர் ஊராட்சி ஒன்றியம் கோண்டூர் ஊராட்சி நண்பர்கள் நகர், ஜோதி நகர், ஞானாம்பாள் நகர் மற்றும் நத்தப்பட்டு ஊராட்சியை சேர்ந்த ராம் நகர் ஆகிய பகுதிகளில் வீடுகளில் சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றும் பணியை ஆய்வு செய்தார்.

பின்னர் மழைநீரை துரிதமாக வெளியேற்றும் பணியை தொடர்ந்து கண்காணிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.கடலூர் மாவட்ட ஆய்வு குழு அலுவலர் ஜெகதீஸ்வரன், தாசில்தார் பலராமன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்தி, ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதிபெருமாள், அரிமா தினகரன், ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: