கமுதியில் மதுவிலக்கு விழிப்புணர்வு

கமுதி, டிச.2: கமுதியில், தமிழ்நாடு மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் நாட்டுப்புற பாடலுடன் மதுவிலக்கு விழிப்புணர்வு நடைபெற்றது. கமுதி,பேருந்து நிலையம் முன்பு மதுவிலக்கு காவல் ஆய்வாளர் கோமதி தலைமையில், முத்தமிழ் நாடக சங்க தலைவர் குற்றாலம் மற்றும் வட்டார வள மைய சிறப்பாசிரியர் முத்திருளாண்டி, கிராமிய தெம்மாங்கு பாடல் கலைஞர் கந்தவேல் ஆகியோர் நாட்டுப்புற இசை நிகழ்ச்சியுடன் மதுவிலக்கு குறித்து, விழிப்புணர்வு பாடல் பாடி பொதுமக்களுக்கு மதுவினால் ஏற்படும் தீமைகள் மற்றும் பாதிப்புகள் குறித்து பாடல் பாடி அசத்தினர்.இந்நிகழ்ச்சியில் மதுவிலக்கு காவலர்கள் அருள்,சக்திகுமார் ராமச்சந்திரன்,அலெக்ஸ் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: