இருளர் மக்களுக்கு நிவாரணம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் 23க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்கள் வசிக்கின்றன. தற்போது பெய்து வரும் கனமழையால், இப்பகுதி இருளர் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு, அரிசி உள்பட நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நல்லூரில் நேற்று நடந்தது. திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ.தமிழ்மணி தலைமை தாங்கினார். ஒன்றிய அவை தலைவர் நல்லூர் ஜெயராமன், ஒன்றிய கவுன்சிலர் சரஸ்வதி பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருக்கழுக்குன்றம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.டி.அரசு, துணை தலைவர் எஸ்.ஏ.பச்சையப்பன் ஆகியோர் 23 இருளர் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர். இதில், கவுன்சிலர் சஞ்சய், நெய்க்குப்பி ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜுனன், துணை தலைவர் கதிரவன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அரிதினேஷ், திமுக நிர்வாகிகள் நல்லூர் பாபு, மதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More