உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் 110 குடும்பங்களுக்கு நிவாரண பொருள்கள்

பரமக்குடி, டிச.1:  பரமக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி 110 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களைதிமுக எம்எல்ஏக்கள் வழங்கினர். பரமக்குடி கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பாக மாநில இளைஞரணி அமைப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தோளூர் தெற்குப்பட்டி கிராமத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார். மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் ஆகியோர் 110 குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருள்கள் உள்ளிட்ட  நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பாரகு,ஒன்றி துணைச் செயலாளர் சந்திரன், பொருளாளர் ஜெகவீரபாண்டியன் உள்ளிட்ட  மாநில,மாவட்ட,ஒன்றிய சார்பாக அணிகளை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: