கூட்டுறவு சங்கங்களில் நகை அடகு இல்லாமல் ரூ.1.60 லட்சம் பயிர்க்கடன் இணை பதிவாளர் தகவல்

திண்டுக்கல், டிச. 1: திண்டுக்கல்  மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நகைகளை  அடமானம் வைக்காமல் ரூ. 1,60,000 வட்டியில்லா பயிர்கடன் வழங்கப்படும் என  கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் காந்தி நாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: தமிழக  அரசு அனைத்து வகை விவசாயிகளுக்கும் ஏதுவாக விவசாய கடன் அட்டை திட்டம்  (KCC) மூலம் பயிர் சாகுபடிக்கு தேவையான பயிர்க்கடன், பயிர் செய்வதற்கு  தேவையான உரம் ஆகியவற்றை தடையின்றி வழங்க ஆணையிட்டுள்ளது.

இதன்படி  விவசாயிகள் தாங்கள் பயிரிட்டுள்ள, பயிரிட உத்தேசித்துள்ள பயிர் மற்றும்  அதன் பரப்பிற்கேற்ப நகை அடமானம் இன்றி நபர் ஜாமீன் அடிப்படையில்  ரூ.1,60,000 வரை வட்டியில்லா பயிர்க்கடன் பெறலாம். இத்தொகைக்கு மேல் கடன்  தேவைப்படுவோர் தங்க நகை அல்லது நில அடமானம் மூலம் ரூ.3 லட்சம் வரை  பயிர்க்கடன் பெறலாம். மேலும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பயிர்  கடன்தாரர்களுக்கு தவணைக்காலத்தில் கடனை திருப்பி செலுத்துபவர்களுக்கு வட்டி  ஏதும் வசூலிக்கப்படமாட்டாது.

மா, தென்னை, கொய்யா, காப்பி மற்றும் இதர  தோட்ட பயிர்களுக்கு பராமரிப்பு செலவிற்காகவும் வட்டியில்லா பயிர்க்கடன்  வழங்கப்படுகிறது. இதுவரை தொடக்க மேலாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில்  உறுப்பினராக சேராமல் உள்ள அனைத்து விவசாயிகளும் உடனடியாக தங்கள்  அருகாமையில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக இணைத்து கொண்டு  பயிர்க்கடன் பெற கேட்டு கொள்ளப்படுகிறது.

மேற்படி கடன்கள் பெறுவதில்  காலதாமதம் ஏற்படின் திண்டுக்கல் வட்டாரம் 7338720606, ஆத்தூர் வட்டாரம்  7338720611, சாணார்பட்டி வட்டாரம் 7338720608, நத்தம் வட்டாரம் 7338720607,  ரெட்டியார்சத்திரம் வட்டாரம் 7338720609, நிலக்கோட்டை வட்டாரம்  7338720610, வத்தலக்குண்டு வட்டாரம் 7338720612, பழநி வட்டாரம் 7338720613,  தொப்பம்பட்டி வட்டாரம் 7338720615, வேடசந்தூர் வட்டாரம் 7338720616.  ஒட்டன்சத்திரம் வட்டாரம் 7338720614, குஜிலியம்பாறை வட்டாரம் 7338720618,  வடமதுரை வட்டாரம் 7338720617, கொடைக்கானல் வட்டாரம் 7338720619 மற்றும்  (0451) 2461734 ஆகிய எண்களில் விவசாயிகள் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு  கொள்ளப்படுகிறது.  இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: