திருவையாறில் கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்

திருவையாறு,ஏப்.23: திருவையாறு புஷ்யமண்டப தெருவை சேர்ந்தவர் ரவி. இவர் வீட்டிற்கு இவருடைய உறவினரான கேரளா மாநிலம் பாலக்காடு கோகுல்தெருவை சேர்ந்த லெட்சுமணன்(70) இவர் கேரளாவில் உள்ள கோயிலில் அர்ச்சகராக வேலை பார்க்கிறார். இவர் மனைவி அனுசுயா(60) ஆகிய இருவரும் வந்து தங்கி தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்துகொள்வார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு லெட்சுமணன் அவரது மனைவி அனுசுயா, ரவி வீட்டில் வந்து தங்கியிருந்தனர். நேற்று மதியம் பார்க்கும்போது லெட்சுமணனை காணவில்லை. பல இடங்களிலும் தேடி பார்த்து கிடைக்காததால் லெட்சுமணன் மனைவி அனுசுயா திருவையாறு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் திருவையாறு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன லெட்சுமணனை தேடி வருகின்றனர்.

Related Stories:

>