பேராவூரணி நகரில்a ரூ.15 கோடியில் சாலை மேம்பாடு திட்டப்பணி திருக்காட்டுப்பள்ளி அருகே அரை குறையாக விடப்பட்ட தார் சாலை சீரமைப்பு

திருக்காட்டுப்பள்ளி, ஏப்.23: திருக்காட்டுப்பள்ளி அருகே அரைகுறையாக விடப்பட்ட தார்சாலை பணி தினகரன் செய்தி எதிரொலியால் சீரமைக்கும் பணி துவங்கியது. திருக்காட்டுப்பள்ளி காந்திசிலை அருகில் தொடங்கி மைக்கேல்பட்டி வரையில் உள்ள கண்டியூர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக போனதால் சில மாதங்களுக்கு முன் தரம் உயர்த்தி போடப்பட்டது. சாலையின் இரு புறமும் சுமார் அரையடி முதல் முக்கால் அடிவரை பள்ளமாக உள்ளது. இரு புறமும் செம்மண் போட்டு நிரப்பி பள்ளத்தை சீர்படுத்த வில்லை. இது குறித்து சாலை பணிகள் செய்த பணியாளர்களிடம் அப்பகுதி மக்கள் தெரிவித்தபோது ஒருவாரத்தில் செய்து தருவோம் என்று கூறி சென்றனர். ஆனால் பல மாதங்கள் ஆகியும் இதுவரை திரும்பி கூட பார்க்கவில்லை என்று கூறுகின்றனர். இதனை சீர்படுத்தும் பணியாக சாலையின் இருபுறமும் செம்மண் அணைக்கும் பணியை நெடுஞ்சாலைதுறையினர் தாமதமின்றி செய்து தரவேண்டும் என்று நேற்று (22ம் தேதி) படத்துடன் தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக நேற்றைய தினத்தில் சாலையின் இருபுறமும் செம்மண் அணைக்கும் பணி நெடுஞ்சாலைதுறையினர் துவக்கியுள்ளனர். செய்தி வெளியட்ட தினகரன் நாளிதழுக்கும், சீர்படுத்தும் பணியை துவக்கியுள்ள நெடுஞ்சாலை துறையிருக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: