100 சதவீத வாக்குப்பதிவுக்கு கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

ராஜபாளையம், மார்ச் 24: ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி மற்றும் நூறு சதவீத வாக்குப்பதிவு உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், கொட்டும் முரசு முழக்கத்துடன் விழிப்புணர்வு பேரணியை கல்லூரி முதல்வர் முனைவர் ஜெகநாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கல்லூரி வளாகத்திற்குள் ஊர்வலம் வந்தனர்.

வாக்குப்பதிவை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய அட்டையை தாங்கி நின்றனர். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் முத்துக்குமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் கௌவரி மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சுகன்யா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Related Stories:

More
>