பெரியகுளத்தில் 5 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனை மாணவ, மாணவியர் 200 பேர் பங்கேற்றனர்

பெரியகுளம், மார்ச் 24: பெரியகுளத்தில் தொடர்ந்து 5 மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவ, மாணவியர் சாதனை புரிந்தனர். பெரியகுளம் சீரடி சாய்பாபா கோயில் அருகே உள்ள மைதானத்தில், கலைமுதுமணி அண்ணாவி சிலம்ப பயிற்சி பள்ளி சார்பில் ஆஸ்கார் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தலைவர் இராம தளபதி தலைமை வகித்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாணவ, மாணவியர் 210 பேர் கலந்து கொண்டு தொடர்ந்து 5 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை நிகழ்த்தினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை கதிரவன் வழங்கினார். இந்த உலக சாதனை நிகழ்ச்சியினை ஏராளமான பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ரசித்தனர்.

Related Stories:

More
>