மதுரை வடக்கு தொகுதியில் பாஜ வேட்பாளர் சரவணன் பிரசாரம்

மதுரை, மார்ச் 24: மதுரை வடக்கு தொகுதியில் பிரசாரம் செய்யும் பாஜ வேட்பாளர் சரவணன், மக்களிடம் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார். மதுரை வடக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜ சார்பில் டாக்டர் சரவணன் போட்டியிடுகிறார். இவர் கடந்த 3 நாட்களாக தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று செல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள நேதாஜி மெயின் ரோடு, பீபீபிகுளம், மாரியம்மன்கோயில் தெரு, காமராஜர் நகர், முல்லை நகர், பாக்கியநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசும்போது, ‘இப்பகுதியில் நிலத்தடி நீரை தேக்கி வைக்க குளங்கள், கண்மாய்களை தூர்வாருவேன். செல்லூர் கண்மாயை ஏற்கனவே தூர்வாரியிருக்கிறேன். வெற்றி பெறச்செய்தால் இன்னும் தூர்வாரி நிரந்தரமாக தண்ணீர் தேக்குவேன். அதுபோல சுத்தமான குடிநீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வேன்.  அனைத்து வீடுகளுக்கும் லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்ேவன். தரமான சாலைகளை அமைப்பேன்’ என்றார். பிரசாரத்தின்போது பாஜ மாவட்ட தலைவர் சீனிவாசன், அதிமுக மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர் ஜெயவேல், பகுதி செயலாளர்கள் கண்ணன், முருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories:

More