அரக்கோணம் இரட்டை கொலையில் மேலும் ஒரு வாலிபர் கோர்ட்டில் சரண்

வேலூர், ஏப். 20: அரக்கோணம் இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒரு வாலிபர் நேற்று ேவலூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். அரக்கோணம் அடுத்த சோகனூர் கிராமத்தை சேர்ந்த அர்ஜுன், செம்பேடு கிராமத்தை சேர்ந்த சூர்யா ஆகியோர் கடந்த 7ம் தேதி படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து பெருமாள்ராஜபேட்டை பகுதியை சேர்ந்த சுரேந்திரன், அஜித், மதன், நந்தகுமார், சத்யா, சூர்யா, சாலை கைலாசபுரம் கிராமத்தை சேர்ந்த கார்த்திக், கைலாசபுரத்தை சேர்ந்த மேகவர்ணம் ஆகிய 8பேரை கைது செய்தனர். அதேபோல் இந்த கொலைவழக்கில் ெதாடர்புடைய பெருமாள்ராஜபேட்டையை சேர்ந்த சிவா, வேடல் பகுதியை சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் வேலூர் கோர்ட்டில் சில நாட்களுக்கு முன்பு சரணடைந்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பலரை போலீசார் தேடிவருகின்றனர்.

இந்நிலையில் இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக பெருமாள்பேட்டையை சேர்ந்த மூக்கன் என்கிற ராஜசேகர்(30) என்பவர் நேற்று காலை வேலூர் ஜேஎம்-5 கோர்ட்டில் சரணடைந்தார். அவரை 15நாள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவர், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories:

>