கொரோனா எதிரொலி பூக்கள் விலை வீழ்ச்சி

மதுரை, ஏப்.20:  மதுரையில் கொரோனா கட்டுப்பாடுகள் எதிரொலியாக பூக்கள் விலை வீழ்ச்சியடைந்தது. மதுரை பூ மார்க்கெட்டில் கிலோ ரூ.500 வரை விற்று வந்த மல்லிகை நேற்று ரூ.200க்கும், மாலை ரூ.150க்கும் விற்பனையானது. இதேபோல் அனைத்து வகை பூக்களின் விலையும் சரிந்தன. பிச்சி கிலோ ரூ.200, முல்லை ரூ.150, செவ்வந்தி ரூ.150, ரோஸ் ரூ.80, சம்பங்கி ரூ.50, அரளி ரூ.50, செண்டு மல்லி ரூ.30 என பூக்கள் விலை இருந்தது. மக்கள் கூட்டம் அதிகமின்றி மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories:

More