வேளாண் மாணவிகளுக்கு கூட்டு பண்ணைய பயிற்சி

நீடாமங்கலம், ஏப்.19: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வேளாண் பணி அனுபவம் பெறுவதற்காக தஞ்சாவூர் மாவட்டம், ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் மாணவிகள் வந்து தங்கியுள்ளனர். மாணவிகள் சித்தமல்லியில் உள்ள இளஞ்செழியன் அவர்களது ஒருங்கிணைந்த கூட்டு பண்ணையில் பரண் மேல் ஆடு வளர்ப்பு, அதன் பராமரிப்பு முறைகள் பற்றியும், கோழி வளர்ப்பு, பண்ணைக்குட்டை அமைக்கும் முறை, மீன் குஞ்சு வளர்ப்பு பற்றியும் கற்றுக் கொண்டனர். மேலும் அவர் வேளாண்மையின் முக்கியத்துவம் பற்றியும் மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

Related Stories: