தனியார் கம்பெனி மேலாளர் வீட்டில் ₹3.5 லட்சம் மதிப்பு நகைகள் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

திருவள்ளூர், ஏப்.19: திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு எஸ்.வி.நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு ராகேஷ் என்ற மகனும் சர்மிலி என்ற மகளும் உள்ளனர். இதில் ரமேஷ் தாம்பரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். ராகேஷ் தியாகராய நகரில் தங்கி சோழிங்கநல்லூரில் உள்ள ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். ஷர்மிலி ஐதராபாத்தில் தனது சித்தப்பா வீட்டில் தங்கி டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 13ம் தேதி ரமேஷூம் அவரது மனைவி ரேவதியும் வீட்டை பூட்டிக்கொண்டு ஐதராபாத்தில் உள்ள தனது தம்பி மகன் வளைக்காப்பிற்காக சென்றிருந்தனர். நேற்று காலை இவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருக்கிறது என்று பின்பக்க வீட்டில் குடியிருப்பவர் இவர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று காலை ராகேஷ் மட்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 சவரன் தங்க ஆரம், மற்றும் 3 சவரன் தங்க நெக்லஸ் ஆக மொத்தம் ₹3.5 லட்சம் மதிப்புள்ள 8.5 தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.புகாரின்பேரில் செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>