இடத்தகராறில் வாலிபருக்கு மண்வெட்டியால் தாக்கு: பெண் உட்பட 2 பேர் மீது வழக்கு

கும்மிடிப்பூண்டி, ஏப்.19: கும்மிடிப்பூண்டி அடுத்த ராகம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல்(38). அதே பகுதியை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன்(55). இருவர் வீட்டிற்கு செல்லும் இடத்தில் பல நாட்களாக பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை  வீட்டிற்கு செல்லும்  வழி பிரச்னை காரணமாக இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த மாயகிருஷ்ணன் திடீரென அருகில் கிடந்த மண்வெட்டியால் கதிர்வேலை  தாக்கினார். இதில் படுகாயமடைந்த கதிர்வேல் கீழே விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனையடுத்து, அவர் மேல் சிகிச்சைக்காக சென்ைன ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கு முன்னதாக,  கதிர்வேல் ஆரம்பாக்கம் காவல் நிலைத்தில் மண்வெட்டியால் தன்னை தாக்கியதாக மாயகிருஷ்ணன் மற்றும் அவருடைய மனைவி மரகதம் ஆகியோர் மீது புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>