நடிகர் விவேக் நினைவாக 500 மரக்கன்றுகள்

உத்தமபாளையம், ஏப். 19: உத்தமபாளையம் நன்செய் தன்னார்வ அமைப்பு , தேனி மாவட்ட தன்னார்வலர்கள் மற்றும் உத்தமபாளையம் காவல்துறை இணைந்து நடிகர் விவேக் |நினைவாக பொது மக்களுக்கு 500 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது. காவல் துணை கண்காணிப்பாளர் சின்னக்கண்ணு தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன்  முன்னிலை வகித்தார். இதில் கோகிலாபுரம் விஏஓ கவிதா, பேராசிரியர் ரமணன் மற்றும் தேனீக்கள் மாற்று திறனாளிகள் அமைப்பின் தலைவர் பாண்டி மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>