குச்சனூரில் தெப்பமான மெயின் ரோடு; வேரோடு சாய்ந்த மரம் திணறிய வாகன ஓட்டிகள்

சின்னமனூர், ஏப். 19: சின்னமனூர் அருேக குச்சனூரில் ெதாடர்ந்த பெய்த மழையால், சாைலயில் வெள்ளம் சூழ்ந்து தெப்பம் போல் காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். சின்னமனூர் அருகே குச்சனூர் பேரூராட்சியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். விவசாயகளும், தொழிலாளர்களும் அதிகம் உள்ளனர். இங்கு சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில் இருப்பதால், அதிகளவில் சுற்றுலாப் பயணிகளும் வருவார்கள். கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் குச்சனூர் மெயின் ரோட்டில் மழைநீர் ஆறாய் பெருக்கெடுத்து ஓடியது. குச்சனூர் பேரூராட்சியில் சாக்கடையிலும்,  பாலத்திற்கு அடியிலும் முறையாக தூர்வாரப்படாமல் குப்பைக்கழிவு சேர்ந்து அடைத்திருப்பதால், மழைநீர் ெசல்ல வழியில்லை. இதனால் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் மூக்கைப் பொத்தியபடி சென்றனர். இதனால் மெயின் ரோட்டில் இரு பாலங்களில் இடையே அரை கிலோ மீட்டர் தூரம் மழைநீர் தேங்கி நின்றதால் தெப்பமாக காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். மேலும் சின்னமனூர் சிறுமழைக்கே மரங்கள் முறிந்து விழுவதும், மின்தடை ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நேற்று அடித்த பலத்த சூறாவளிக்கு சின்னமனூர் ராஜபாளையம் சாைலயில் இருந்த மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது. எனவே பேரூராட்சி நிர்வாகம் இப்பகுதியில் மழைநீரும், கழிவுநீரும் முறையாக செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.

Related Stories:

>