புதூர், வடகரை பேரூராட்சிகளில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம்

செங்கோட்டை, ஏப்.19: தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவுபடியும், நெல்ைல மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சேதுராமன் அறிவுறுத்தலின் பேரிலும் கொரோனா வைரஸ் 2வது அலை தடுப்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் புதூர் பேரூராட்சி அலுவலகத்திலும், வடகரை பேரூராட்சி அலுவலகத்திலும் நடந்தது. பேரூராட்சிகளின் செயல் அலுவலர் தமிழ்மணி தலைமை வகித்தார். கூட்டத்தில் புதூர், வடகரை பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த கடை உரிமையாளர்கள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள், கோயில் நிர்வாகிகள், ஜமாத் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் வழிபாட்டுத் தலங்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்தும், கடைகளுக்கு வரும் பொதுமக்கள் முக கவசம் அணிந்து வருவதன் அவசியம் குறித்தும், சமூக இடைவெளியை பின்பற்றுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், வணிகர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்தும், கொரோனா தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு குறித்தும் வியாபாரிகளிடமும் கடை உரிமையாளர்களிடமும், பொதுமக்களிடமும் எடுத்துரைக்கப்பட்டது.

Related Stories:

>