அரிமளம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிப்பர் லாரி, பொக்லைன் பறிமுதல்

திருமயம்.ஏப்.18: அரிமளம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய பொக்லைன் இயந்திரம், டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்ததோடு 2 பேரை சிறையில் அடைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள உசிலம்பட்டி பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக கே.புதுப்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பந்தப்பட்ட பகுதியில் சென்று ஆய்வு செய்தபோது ஜேசிபி இயந்திரம் மூலம் டிப்பர் லாரி உதவியோடு மணல் கடத்தலில் ஈடுபடுவது தெரியவந்தது. இதை எடுத்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரம், டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அரிமளத்தை சேர்ந்த ஜேசிபி டிரைவர் சதீஷ் முத்து(21), கீழாநிலைக்கோட்டை சேர்ந்த லாரி டிரைவர் கிருத்திக்ரோஷன் (21) ஆகியோரை கே.புதுப்பட்டி போலீசார் கைது செய்து அறந்தாங்கி கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories:

More
>