உர விலை உயர்வை கண்டித்து

திருவையாறு, ஏப்.17: தஞ்சை மாவட்டத்தில் உர விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவையாறு பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் சிபிஎம் கட்சியினர் மத்திய அரசு உர விலை உயர்வை திரும்ப பெற கோரி கண்டன ஆர்பாட்டம் தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ராமு தலைமையில் நடைபெற்றது. கண்டன ஆர்பாட்டத்தில் விவசாய சங்க மாவட்ட பொருளாளர் பழனியய்யா, சிபிஎம் ஒன்றிய செயலாளர் ராஜா, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பிரதீப் ராஜ்குமார் உள்பட விவசாய சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பட்டுக்கோட்டை: உர விலை உயர்வைக் கண்டித்தும், உடனடியாக விலை உயர்வை வாபஸ்பெற வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து பட்டுக்கோட்டையில் தலைமை தபால் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் செல்வம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர்கள் பட்டுக்கோட்டை கந்தசாமி, திருவோணம் ராமசாமி, மதுக்கூர் வேதாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் உர விலை உயர்வை கண்டித்தும், உடனடியாக விலை உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். தஞ்சை: ஒரத்தநாடு பஸ் ஸ்டாண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உரம் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மத்திய, மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. விவசாய சங்க ஒன்றிய செயலாளர் மோகன்தாஸ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ஜெய்சங்கர், நகரச் செயலாளர் வசந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Stories: