புலியூர் பிரிவு மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

கரூர், ஏப்.16: கரூர் மின்வாரியம் சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளதாவது: கரூர் நகரிய கோட்டம், புலியூர் உபகோட்டத்திற்கு உட்பட்ட, உப்பிடமங்கலம் ரோடு, புலியூர் துணை மின்நிலையத்தில் இயங்கி வந்த இயக்கலும், காத்தலும், புலியூர் பிரிவு அலுவலகம் தற்காலிகமாக கட்டிட பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதையடுத்து அனுமதி பெற்று திருச்சி மெயின் ரோடு, வீரராக்கியம் ரயில்வே ஸ்டேஷன் எதிரில் கதவு எண் 140ல் உள்ள கட்டித்தில் இன்று (16ம்தேதி) முதல் மாற்றப்பட்டு இயங்க உள்ளது. இப்பிரிவு மின் அலுவலகம் ஆண்டிப்பாளையம், காளிபாளையம், வீரராக்கியம், உள்வீரராக்கியம், வளையல்காரன்புதூர், சாந்திநகர், அண்ணாநகர், ஜனானூர், மேட்டாங்கிணம், நத்தமேடு, மணவாசி, கிழமாயனூர், மேலமாயனூர், ரெங்கநாதபுரம், கட்டளை, மலையப்பபுரம், நத்தமேடு, என் புரம், மேலக்கட்டளை, நடராஜபுரம், சின்னமநாயக்கப்பட்டி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.

Related Stories:

>