வாலிபருக்கு கத்திக்குத்து ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலை

திருச்சி, ஏப். 16: திருச்சி மதுரை ரோடு நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் அன்சாரி மகன் அபுதாஹீர் (22). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கோட்டை ரயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு மதுரை ரோடு ஜீவா நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த துரை (22), இவரது நண்பர் சூர்யா (22) இருவரும் வந்தனர். இருவரும் பெயிண்டர்கள். மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த அபுதாஹீரை அழைத்து பீடி வாங்கி வரும்படி இருவரும் கூறினர். அதற்கு மறுத்த, அபுதாஹீர் அவர்கள் திட்டியுள்ளார். இதுகுறித்து அறிந்த அபுதாஹீர் அண்ணன், அங்கு சென்று இருதரப்பினரிடையே சமாதானம் செய்து வைத்தார்.இதற்கிடையில், முன்விரோதம் இருந்து வந்த நிலையில், கடந்த 13ம் தேதி ஜீவா நகர் கட்டபொம்மன் தெரு வழியே வந்த அபுதாஹீரிடம் தகராறில் ஈடுபட்ட இருவரும், அவரை தாக்கி கத்தியால் குத்தி விட்டு தப்பினர். இதில் காயமடைந்த அபுதாஹீர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த கோட்டை போலீசார் தப்பிய சூர்யாவை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவான துரையை தேடி வருகின்றனர்.

Related Stories:

>