கொரோனா 2வது அலை பரவல் விருதுநகர் ரேஷன் கடைகளில் சமூக இடைவெளி மிஸ்ஸிங்

விருதுநகர், ஏப். 16: விருதுநகர் மாவட்டத்தில் 940 ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.  கொரோனா தொற்று 2வது அலை வேகம் காட்டி வருகிறது. தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க வருவோர் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க வருவோர் மாஸ்க் அணிந்து வரும் நிலையில், பலர் மாஸ்க்கை முறையாக மாட்டுவதில்லை. ஒப்புக்கு மாஸ்க் மாட்டி வருவோர் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றாமல் கூட்டமாக நின்று பொருட்கள் வாங்க செல்கின்றனர்.

முதல்கட்ட பரவலின் போது சமூக இடைவெளி கட்டங்கள் வரைந்து மக்கள் நிற்க வைத்து அனுமதிக்கப்பட்டனர். தற்போது இரண்டாவது பரவலில் மார்க்கெட், கடை வீதிகள், கோயில்கள், அரசு மருத்துவமனைகள், ரேஷன் கடைகள், ஜவுளிகடைகளில் சமூக இடைவெளி வட்டங்கள், கட்டங்கள் எதுவும் இல்லை. மக்கள் கூட்டமாக, ஒருவரை ஒருவர் இடித்தும், உரசியும் சென்று பொருட்கள் வாங்கி செல்கின்றனர். அரசு, தனியார், மினி பஸ்களில் மக்கள் கூட்டமாக நிற்க வைத்து ஏற்றி செல்கின்றனர். இந்த உரசலின் வேகம் சில நாட்களில் கொரோனா தொற்று பாதிப்பாக கிளம்பும். தூக்கத்தில் இருக்கும் மாவட்ட நிர்வாகம் எப்போது விழிக்கும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Related Stories: