தமிழ் புத்தாண்டையொட்டி கோயிலில் கனி காணல் நிகழ்ச்சி

ராமநாதபுரம், ஏப்.15: தமிழ் புத்தாண்டையொட்டி ராமநாதபுரம் நகரில் உள்ள பல்வேறு கோயில்களில் கனி காணல் நிகழ்ச்சி நடந்தது. தமிழ் புத்தாண்டு பிறப்பு நாளில் கனி காண்பதால் சகல பாக்கியங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதன்படி, சித்திரை முதல் நாளில் கனிகளை காணும் சிறியவர்களுக்கு பெரியவர்கள் பணம் வழங்கி வாழ்த்து தெரிவிக்கும் சம்பிரதாயம் இன்றும் வழக்கத்தில் உள்ளது. அப்படி கிடைக்கும் பணம் நிலைத்து நிற்கும் என்றும், அந்த ஆண்டு முழுவதும் குறைவில்லா செல்வம் நீடிக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி சித்திரை ஒன்றாம் நாள் விஷு நாளாக கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் நகரில் சிவன் கோயில், கன்னிகா பரமேஸ்வரி, ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், குண்டுக்கரை முருகன் கோயில், வெட்டுடையாள் காளி அம்மன், காட்டு பிள்ளையார்கோவில் ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் ஆகிய கோயில்களில் சித்திரை கனி காணும் நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி கோயில்களில் குவிந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து கனி தரிசனம் செய்தனர்.

Related Stories: