பிறந்தநாள் கொண்டாட்டம் அம்பேத்கர் சிலைக்கு திமுக உள்பட பல்வேறு அமைப்பினர் மாலை

சேலம், ஏப்.15: சேலத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. திமுக உள்பட பல்வேறு அமைப்பினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சேலம் தொங்கும் பூங்கா அருகேயுள்ள அம்பேத்கர் சிலைக்கு மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன், மாநகர செயலாளர் ஜெயக்குமார், ஆதிதிராவிடர் நலக்குழு மாநகர அமைப்பாளர் தேவதாஸ், பகுதி செயலாளர்கள் ராமச்சந்திரன், சாந்தமூர்த்தி, சேலம் மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் சேலத்தாம்பட்டி ராஜேந்திரன், கோட்ட செயலாளர்கள் தமிழரசன், நீதிவர்மன், முன்னாள் கவுன்சிலர்கள் விவேகானந்தன், புவனேஸ்வரி முரளி, சங்கீதா நீதிவர்மன், லில்லி மார்க்ரெட் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல் அதிமுக சார்பில், மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், சட்டமன்ற உறுப்பினர் சக்திவேல், முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ், சேலம் தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் பாலசுப்ரமணியம், முன்னாள் மேயர் சவுண்டப்பன் உள்பட பலர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாஸ்கர் தலைமையில் நிர்வாகிகள், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் வர்த்தக பிரிவு சுப்ரமணி, ஆக்ஸ்போர்டு ராமநாதன், பொதுக்குழு உறுப்பினர் திருமுருகன், மாநில செயலாளர் வசந்தம்சரவணன், வக்கீல் சுரேந்தர்,உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சேலம் மாநகர், மாவட்ட பாஜ தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேக்தர் சிலைக்கு நாவரசன், பொருளாளர் காஜாமைதீன் ஆகியோர் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அம்பேத்கர் மக்கள் இயக்க மாநிலத்தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை தலைமையில் நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சேலம் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மேற்பார்வையாளர், பணியாளர்கள் சங்கம் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு தலைவர் ஜெயவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆதித்தமிழர் பேரவை சார்பில் அம்பேத்கர் சிலைக்கு தலைவர் அதியமான் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட செயலாளர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அருந்ததியர் மக்கள் இயக்கம் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு வக்கீல் பிரதாபன் தலைமையில் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சேலம் மத்திய, மாவட்ட இந்திய குடியரசு கட்சி சார்பில் தலைவர் செபாஸ்டின் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். சேலம் மாவட்ட இந்திய குடியரசு கட்சி மாவட்ட செயலாளர் தலைமையில் கணேசன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு பல்கலைக்கழக கல்லூரி எஸ்.சி., எஸ்.டி., ஆசிரியர் மற்றும் பணியாளர் சங்கத்தினர், பேராசிரியர் மாறவர்மன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மத்திய மாநில எஸ்.சி., எஸ்.டி., அரசு ஊழியர்கள் கூட்டமைப்பினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். புரட்சி பாரத மக்கள் கட்சியின் நிறுவனர் நடராஜ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநில பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பல்வேறு அமைப்பினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories:

>